0 0
Read Time:7 Minute, 11 Second

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா…?.முடக்கத்தான் கீரை பயன்கள்!

முடக்கத்தான் கீரை பயன்கள்-அந்தக் காலங்களில் உடம்புக்கு வாயுத்தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு, தலையில் முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகளுக்கும் பாட்டிமார்கள் வீட்டுத்தோட்டத்தில் உள்ள முடக்கத்தான் கீரையைப் பறித்து வந்து ரசமோ அல்லது தோசையாகவோ செய்து கொடுப்பார்கள்.

அதன் பிறகு உடலில் பல தற்காலிக நோய்கள் கிட்டவே நெருங்காது.

முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.

முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுடன் உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.

முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

முடக்கத்தான் கீரையை வாய்வு பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. ஒரு மேஜைக்கரண்டி முடக்கத்தான் கீரை சாறு பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.

இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும். முடக்கத்தான் கீரையானது முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும்.

இதை ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.

மூட்டு வலி

முடக்கு வாத நோய் மூட்டுகளை முடக்கி வைக்கிறது. இந்த கீரை முடக்கு வாத நோயினை சரி செய்வதால் முடக்கத்தான் என பெயர் பெற்றது.

மூட்டு வலியிலிருந்து குணமடடைய ஆமணக்கு எண்ணையில் முடக்கத்தான் இலையினை நன்கு நலைத்து மூட்டு பகுதியில் தேய்க்க வேண்டும்.

மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு முடக்கத்தான் கீரை மிகவும் நல்லது.

பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் கீரை சாறு, ஒரு மேசை கரண்டி போதும்.

வாயு பிரட்சனை

வாயு சமபந்தபட்ட பிரச்சனைகள் உடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை முடக்கத்தான் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள வாயுகலைந்து வெளியேறிவிடும்.

பொடுகு

பெரும்பாலானோர் பொடுகு தொந்தரவினால் அவதிப்படுகிறார்கள்.

இவர்கள் முடக்கத்தான் இலையினை கொண்டு ஆட்டப்பட்ட எண்ணையயைவ தலைக்கு தேய்த்து வருவதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம்.

மூலம்

நீண்ட நாட்கள் மலசிக்கல் மற்றும் நார் சத்து குறைவான உணவுகளினை சாப்பிடுவதாலும் மூலம் ஏற்படுகிறன்றது.

தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையினை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மூல நோய்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தோல் வியாதிகள்

முடக்கத்தான் கீரை தோல் சார்ந்த அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது. இந்த கீரையினை நன்கு மை போன்று அரைத்து கொள்ளவும்.

அதனை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சைனைகளான சொறி சிரங்கு, படர்தாமரை போன்ற பிரச்சனைகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் குணமாகும்.

முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி

ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் இலை காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைத்து கொள்ளவும்.

அந்த நீரை மட்டும் வடித்து சாதாரண புளி ரசம் வைப்பது போல அந்த நீரில் புலி கரைத்து மிளகு, பூண்டு, சீரகம் சேர்த்து ரசம் தயாரிக்க வேண்டும்.
முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி

முடக்கத்தான் கீரை தோசை செய்ய இரண்டு கோப்பை புழுங்கல் அரிசியை ஊற வைத்து அத்துடன் இரண்டு கைப்பிடி முட கற்றான் கீரையையும் உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தோசை போல சுட்டு சாப்பிடலாம்.

இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.

நல்ல காரமான சட்னி உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இதனால் பல நோய்களிடம் இருந்து விடுதலை கிடைக்கும். நீண்ட நாட்கள் இயற்கை தரும் உணவே மருந்து என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %