0
0
Read Time:1 Minute, 4 Second
தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 23ம் தேதியான நேற்று தமிழக அரசானது 50% பார்வையாளர்களிடம் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்தது. இதனால் திரையரங்குகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் காட்டி திரையரங்கு பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். பார்வையாளர்களுக்கு டிக்கெட்வாங்கும் முன் கிருமி நாசினி கொடுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பார்வையாளர்களுக்கு முககவசம் கட்டாயம். இதனையடுத்து இன்று மயிலாடுதுறையில் திரையரங்குகள் திறக்கும் பணிகள் நிறைவுபெற்றது.