0 0
Read Time:3 Minute, 40 Second

2 நாட்களுக்கு முன் ஸ்டாலின் பதிவிட்டிருந்த டிவிட்டர் பதிவில் பேனர்கள் வைப்பதனை தவிர்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்; அதன்படி கடலூர் நகரில் எங்கும் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை வாழ்த்தி பேனர் வைக்கப்படவில்லை.

கடலூரில் உள்ள குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர் ஏற்கனவே தனது பிறந்தநாளான இன்று யாரும் தன்னை கான நேரில் வரவேண்டாம் என்று ஒரு வாரத்திற்கு முன்பாக அறிக்கை விடுத்திருந்தார். பின் இன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில்  கடலூரில் எந்த இடத்திலும் அவருக்கென பேனர்கள் வைக்கபடாமல் வெறும் போஸ்டர்கள் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளது 

கடந்த வாரம் 20 ஆம் தேதி விழுப்புரத்தில் விழுப்புரம் –  மாம்பலப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற  திருமண விழாவிற்கு வந்த தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்களை வரவேற்பதற்காக அவர் வரும் வழி நெடுகிலும் பேனர்களும் தி.மு.க கொடிகளும் நடப்பட்டிருந்தன, அப்பொழுது தி.மு.க கொடி நடும் பணியில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்பட்டிருந்த எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதற்கு பின் கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வர் திரு. முக ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பேனர் உள்ளிட்ட ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியும் ஆங்காங்கே அத்தகைய செயல்கள் கழகத்தினர் என் தொடர்வது வருத்தமளிக்கிறது. வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். சிறுவன் தினேஷை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாரின் துயரில் துணைநிற்கிறேன்.”என கூறியிருந்தார்.

அதற்கு பின் இன்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் தி.மு.க வினர் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினர், அதுமட்டும் இன்றி இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்த டிவிட்டர் பதிவில் பேனர்கள் வைப்பதனை தவிர்க்குமாறு உத்தரவிட்டிருந்தார் அதன்படி இன்று கடலூர் நகரில் எங்கும் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை வாழ்த்தி எந்த இடத்திலும் பேனர் வைக்கப்படவில்லை அதற்கு பதிலாக எல்லா இடங்களிலும் வெறும் போஸ்டர்களே ஒட்டப்பட்டிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %