கடலூர் டவுன்ஹாலில் 36-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், தொடங்கிவைத்தார். தேசிய கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்ட் -25 முதல் செப்டம்பர் – 08 வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான 36-வது தேசிய கண்தான நிகழ்ச்சி இன்று
முதல் செப்டம்பர்-8ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடைபெறுகின்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சி முதல் நாளான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் செவிலியர்கள், மருத்துவர்கள், கண்மருத்துவ அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண்தான விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து தேசிய கண்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பொதுமக்கள் அனைவரும் கண்தான விழிப்புணர்வினை ஏற்றுக்கொண்டு உலகிலேயே பலகோடி மக்கள் பார்வை இழப்பை சந்தித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதனை சரிசெய்வதற்கு ஒவ்வொருவரும் நாம் இறந்த பிறகு நமது இரண்டு கண்களை தானமாக கொடுத்தோமானால்
அதனால் நான்கு நபர்களுக்கு பார்வை கிடைக்கும். எனவே நாம் அனைவரும் இந்த ஒவ்வொருவரும் நாம் இறந்த பிறகு நமது இரண்டு கண்களை தானமாக கொடுத்தோமானால்
அதனால் நான்கு நபர்களுக்கு பார்வை கிடைக்கும். எனவே நாம் அனைவரும் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு தாங்களும் தங்கள் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் கண்தானத்தின் அவசியத்தை எடுத்து கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) ரமேஷ் பாபு, துணை இயக்குனர் (சுகாதரம்) திருமதி – மீரா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.சாய்லீலா, மாவட்ட திட்ட மேலாளர்
மரு.கேசவன், மாவட்ட மலேரியா அலுவலர் மரு.கெஜபதி, செவிலியர்கள், கண்மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.