0 0
Read Time:1 Minute, 51 Second

ஒரு காலத்தில் செஞ்சுரிகளாக அடித்து மிரட்டிக்கொண்டிருந்தவர் விராத் கோலி. சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர் அவர்தான் என்று  விமர்சகர்கள் கூறிவந்தனர். ஆனால், சமீபகாலமாக விராத் கோலியின் செயல்பாடு, அவரையே யோசிக்க வைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 3-வது டெஸ்ட் தொடரில், வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்த விராத், அதற்கு முந்தைய போட்டிகளில் 0, 42, 20 என ரன்கள் எடுத்தார். டெஸ்ட், ஒருநாள், டி20 எனக் கடைசியாக விளையாடிய 50 இன்னிங்ஸிலும் ஒரு சதம் கூட அவர் அடிக்கவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும் எடுத்துள்ள விராத் கோலி, கடந்த ஒன்றரை வருடத்துக்கு மேலாக சதம் எடுக்கவில்லை. கடைசியாக, 2019-ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிராக 136 ரன்கள் எடுத்தார். அதன் பின் விளையாடிய 50 இன்னிங்ஸில் அவர் நூறை தொடவில்லை. இதனால் அவருடைய ஃபார்ம் கேள்விக் குறியாக இருக்கிறது.

ஏற்கனவே, புஜாரா, ரஹானே ஆகியோர் பார்முக்கு திரும்பாத நிலையில் கேப்டன் கோலி யும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியால் இருப்பது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %