0 0
Read Time:1 Minute, 59 Second

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை மேளதாளங்கள் முழங்க ஆதீனம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி முதன்முதலாக வருகைதரும் மதுரை ஆதீனத்தின் சிறப்புக் கொலு காட்சி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தருமபுர ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு தருமபுர ஆதீன மடாதிபதி ஆறு கட்டி சுந்தரம் வளையம் என்ற காதணி ஒன்றை வழங்கி பாரம்பரியமான ஆச்சாரிய தீட்சை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், தாய்நாடு தாய்மொழி, பசு, பூமி, பெற்றதாய் ஆகியோரை பேணி பாதுகாக்க வேண்டும், தமிழ்நாட்டில் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து பொதுமக்களுக்கு நல்ல செய்திகளை வழங்கி ஆன்மீக சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான்கள், மற்றும் ஊழியர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %