0 0
Read Time:2 Minute, 36 Second

“உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா பக்தர்களின்றி வருகின்ற 29ம் தேதி தொடங்க இருக்கிறது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் ஆலயம் வருவதை தவிர்க்க வேண்டும்” என்று பேராலய அதிபர் கூறியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா வருடாவருடம் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதன் காரணமாக பக்தர்கள் இல்லாமல் நடைபெறப் போகும் வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில், வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “வருகின்ற 29ம் தேதி கோலாகலமாக தொடங்கி 8 ஆம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க பக்தர்கள் யாரும் வரவேண்டாம். அதே நேரம் காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கமாக நடைபெறும் அனைத்து திருப்பலிகளும் அனைத்து மொழிகளிலும் நடைபெறும். வரும் செப்டம்பர் 7ம் தேதி பக்தர்கள் இல்லாமல் பெரிய தேர் பவனி நடைபெறும். பேராலயத் திருவிழாவை தொலைக்காட்சி மற்றும் யூடியூப்  போன்ற சமூக வலைத் தளங்களில் கண்டுகளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே மாதாவை தரிசிக்க வேண்டும். மாதா பிறந்த தினமான 8ம் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும். அதே நேரம் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் ஆலயம் வருவதை தடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %