0 0
Read Time:4 Minute, 27 Second

கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29), பெயிண்டர். இவர், கடலூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வரும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண், வேலைக்கு செல்லும் போது பின்தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். 

முதலில் மறுப்பு தெரிவித்து வந்த இளம்பெண், நாளடைவில் மணிகண்டனை காதலிக்க தொடங்கினார். பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த 16.3.2018 அன்று இளம்பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மணிகண்டன் அங்கு சென்று, அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். 
அதனை தொடர்ந்து 18.4.2018 அன்று மணிகண்டன், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தங்கள் வீட்டில் திருமணம் பற்றி பெற்றோர் உன்னிடம் பேச உள்ளனர். அதனால் வீட்டுக்கு வா என அழைத்துள்ளார்.

இதை நம்பிய இளம்பெண், மணிகண்டனின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவரது குடும்பத்தினர் யாரும் இல்லை. இதையடுத்து மணிகண்டன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் மீண்டும் உல்லாசம் அனுபவித்தார். 
இதில் அந்த இளம்பெண் கர்ப்பிணியானார். இதையடுத்து அவர், மணிகண்டனிடம் சென்று தான் கர்ப்பமாக உள்ளதாகவும், அதனால் உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். 
அதற்கு மணிகண்டன், இதுபற்றி எனது பெற்றோருக்கு தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும், அதனால் கர்ப்பத்தை உடனே கலைத்துவிடும்படி கூறி அவருக்கு மாத்திரை வாங்கி கொடுத்து, கருக்  கலைப்பு செய்துள்ளார்.

அதன் பிறகு 16.6.2018 அன்று இளம்பெண், மணிகண்டனிடம் சென்று தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர், எனக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்யும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் பெற்றோர் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வதாகவும், உன்னுடன் பெற்றோருக்கு தெரியாமல் குடும்பம் நடத்துவதாகவும் கூறினார்.
 இதை கேட்டு மனமுடைந்த இளம்பெண், வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். 
பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இளம்பெண், கடலூர் அ னைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இதுதொடர்பாக கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில், மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 
மேலும் அபராத தொகையில் ரூ.40 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %