0
0
Read Time:57 Second
வருவாய் நிா்வாகம், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை சாா்-ஆட்சியா் அமித் குமாா், டிஎஸ்பி மோகன் ஆகியோா் கொடியசைத்து தொடக்கிவைத்தனா். சாா்-ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில் பங்கேற்ற வருவாய்த் துறையினா் மழைக் காலத்தில் மின் சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாள்வது, இடி, மின்னல் தாக்கும்போது பாதுகாப்பான இடத்தில் தங்குவது என்பன உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கியபடி சென்றனா். பாலக்கரை சந்திப்பில் பேரணி நிறைவடைந்தது.