மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் தென்னை மரத்தில் கூடுகட்டி உள்ள கொடிய விஷமுள்ள கதண்டு வண்டுகள் கொட்டிவிடும் என்ற அச்சத்தில் கூட்டினை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கதண்டு என்ற கொடிய வண்டு காட்டு பகுதிகளில் அதிகளவு காணப்படும். மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் தென்னை மரம், பன மரங்களில் கூடு கட்டி வசித்து வருகிறது. இந்த கொடிய விஷ வண்டு கூட்டமாக வந்து தாக்கும். ஒருவரை 4க்கும் மேற்பட்ட வண்டுகள் கொட்டினால் உயிர் பிழைப்பது கடினம். காலில் தாக்கினால் உடனே விஷம் மூளையை தாக்கி கிட்னியை செயல் இழக்க செய்யும். பின்பகுதியில் கொட்டினால் உயிர் இழக்க நேரிடும்.
இந்த கொடிய விஷ வந்து ஆரோக்கியநாதபுரத்தில் வயல் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் ஒரு பெரிய பலா பழம் அளவிற்கு கூடு கட்டி உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வயல் வெளிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் அருகே குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் கதண்டு வண்டுகளை அகற்ற கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே கதண்டு விஷ வண்டு தாக்கி தந்தை மகன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.