மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கடைவீதியில் விடுதiலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் ராஜ்மோகன் மணி வளவன் கலைவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.
செம்பனார்கோவில் ஒன்றியம் நரசிங்கநத்தம் கிராமத்தில் நரசிங்கநத்தம், கீழ காலனி, சாமியாங்குளம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில், கடந்த 9-ஆம் தேதி நரசிங்கநத்தம் களம் புறம்போக்கு பகுதியில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைகளை அமைத்தனர. அந்த இடத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைய உள்ளதால் இதற்கு மாற்று சமூதாயத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பு இடையே தகராறு ஏற்பட்டது. ஆதிதிராவிடர் குடும்பத்தினர் அமைத்த குடிசைகளை மற்றொரு தரப்பினர் அடித்து நொறுக்கி பிய்த்து எறிந்தனர்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆதிதிராவிட சமூதாயத்தினரின் குடிசைகளை அடித்து நொறுக்கிய மாற்று சமூதாயத்தினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இந்த பிரச்சனையில் எந்த வித குற்ற செயலில் ஈடுபடாத ஆதிதிராவிட சமுதாய மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்தும், உடனடியாக நரசிங்கநத்தம் கிராமத்தில் உள்ள குடியிருப்புமனை இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் ராஜ்குமார் கலியமூர்த்தி வழக்கறிஞர் பூபாலன் சாமி சீசர் பாரதி வளவன் சீர்காழி ஒன்றிய பொறுப்பாளர்கள் டேவிட் சிவகுமார் பாலுவுடன் அருள் முதல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்ட முடிவில் எழுச்சிமணி நன்றி உரையாற்றினார்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.