மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான
சட்டைநாதர் கோயில் உள்ளது, இக்கோயிலில் திருநிலைநாயகி, பிரமபுரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்,
பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞான சம்பந்தருக்கு பார்வதி, சிவன் நேரில் காட்சியளித்து பார்வதி திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டினார். இதனைத் தொடர்ந்து திருஞான சம்பந்தர் ஞானம் பெற்று.
தேவார பாடல்களை பாட தொடங்கினார். இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பணி தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில்மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்தபரமாச்சாரிய சுவாமிகள், கோயில் கட்டளைசொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், பிற்பனந்தாள் காசிமடம் சபாபதி தம்புரான் சுவாமிகள், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சாமிநாதன், பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன்,மதிமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் மார்க்கோனி வழக்கறிஞர்கள் பாலாஜி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து
கொண்டனர். நிகழச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி செந்தில், கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர் கள் செய்திருந்தனர்.