0 0
Read Time:5 Minute, 52 Second

மத்திய அரசின் இலவச கல்வியைவழங்க மறுக்கும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!.

மத்திய அரசின் இலவச கல்வியைவழங்க மறுக்கும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும் என செப்டம்பர் 5-ஆம் தேதி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் என அறிவித்துள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு;

“மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடந்த 2011 – ல் பிறப்பித்த அரசானையின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்பட்ட அனைவரும் தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

2010 – ம் ஆண்டிற்கு பிறகு ஆசிரியர்களாக நியமிக்கமிக்கப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்குள் இத்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கிறிஸ்தவ காத்தோலிக்க சபையின் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சிறுபான்மையின பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்தாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் 42 சதவீத கல்வி நிறுவனங்களை கிறிஸ்தவ மத அமைப்புகள் நடத்தி வருகின்றன. இவை சிறுபான்மை அந்தஸ்து பெற்றிக்கின்ற காரணத்தினால் இந்த கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஏராளமான நிதி உதவியும் ஆசிரியர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசின் உத்தரவை பின்பற்ற கிறிஸ்தவ மத அமைப்புகள் தயாராக இல்லை. இதற்கு காரணம் சிறுபான்மையினர் எனும் பெயரில் கிறிஸ்தவ, முஸ்லீம்கள் ஏராளமான சலுகைகள் அனுபவித்து வருவதே.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அனைத்து மதத்தவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால் பொது சிவில் சட்டம் இல்லாத காரணத்தினாலும், சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லீம்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள காரணத்தினாலும், தமிழக அரசால் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும்பான்மை இந்துக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் 70 சதவீதம் இந்து மாணவர்களே படிக்கிறார்கள். பணியாற்றும் ஆசிரியர்களில் 40 சதவீதம் பேர் இந்துக்கள். இதில் கிறிஸ்தவ ஆசிரியர்களும் கிறிஸ்தவ மாணவர்களும் மட்டுமே பலனடைவார்கள்.

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தகுதி இல்லாதவர்களை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்து கொள்ள முடியும். ஆனால் அதற்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்க வேண்டும். அது தவிர படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தகுதி இல்லாத ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் கல்வியில் பின்னடைவு ஏற்படும். இது முழுக்க முழுக்க இந்து ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். கல்வித்துறையில் மோசடி மத மாற்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்.

தமிழக அரசு உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் மத பாகுபாடு இல்லாமல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற நிலை உருவானால் மட்டுமே கல்வித்துறையில் கிறிஸ்தவ ஆதிக்கத்தை முறியடிக்க முடியும்.

மத்திய மாநில அரசுகள் இணைந்து கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்.
தமிழக அரசின் ஆணையை பின்பற்ற மறுக்கும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த கோரிக்கையினை வலியுறுத்தி ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.”

என மாநில செயலாளர், கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் அறிக்கையை அனுப்பியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %