ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்!!
முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்சத்து போன்றவை காணப்படுகின்றன.
முள்ளங்கினை உண்ணும்போது அவை குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகின்றது. இக்காயில் நார்சத்து மற்றும் அதிகளவு நீர்ச்சத்தினையும் கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இக்காய் சிறந்த தேர்வாகும்.
முள்ளங்கியானது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சினை நீக்க உதவுகிறது. முள்ளங்கியானது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவினை அதிகரித்து இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை உயர்த்துகிறது.
இரத்தத்தில் பிலிரூபினின் அளவினை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பையினை இக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரி செய்து கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள செல்கள் நன்கு செயல்பட ஊக்குவிக்கின்றன.
முள்ளங்கியில் உள்ள அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.
முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலானது முள்ளங்கிச் சாற்றினை அருந்தும்போது குணமாகிறது. இக்காயானது சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதையில் உள்ள நச்சினை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் குறைபாடுகளுக்கு இக்காய் நல்ல மருந்தாக உள்ளது.
முள்ளங்கி என்பது ஒரு நீர்க்காயாகும். இது ஆண்டு முழுவதும் எந்த தங்கு தடையும் இன்றி கிடைக்கும். மேலும், குளிர் காலத்தில் அதிகமாக விளையும் காய்கறி வகையாகும். முள்ளங்கி காய் மட்டுமல்லாமல், அதன் கீரையும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் முள்ளங்கி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.
சத்து மாத்திரைகளுக்கும், டானிக்குகளுக்கும் செலவிடுவதை விட்டுவிட்டு இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் வாங்கி உண்டு வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.
100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்களைப் பார்ப்போம்.
17 கலோரி, 2 கிராம் நார்ச்சத்து, 15 மில்லி கிராம் விட்டமின் சி, 35 மில்லி கிராம் கால்சியம், 22 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில், காய்கறிளிலேயே விட்டமின் சி அதிகளவில் இருப்பது முள்ளங்கியில்தான். அதேப்போல, கால்சியமும், பாஸ்பரசும் முள்ளங்கியில் அதிகளவில் இருப்பது அதன் சிறப்பாகும்.
முள்ளங்கியை விட அதன் கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
100 கிராம் கீரையில்…
41கே கலோரியும், 3.8 கிராம் புரதமும், 1 கிராம் நார்ச்சத்தும், 81 மில்லி கிராம் விட்டமின் சி ((ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் அடிப்படையான விட்டமின் சி இதில் இரண்டு மடங்கு உள்ளது), 5295 மைக்கோ கிராம் பீடா கரோடின் (இதுவும் இரு மடங்கு உள்ளது), 400 மில்லி கிராம் கால்சியம் (ஒரு மனிதனுக்கு 100 கிராம் தேவை), 59 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சத்துக்கள் பெருமளவு இந்த முள்ளங்கியில் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே, வெறும் நீர்க்காய் என்றோ, சளிப்பிடிக்கும் என்றோ, சுவையற்றது என்று கூறியோ முள்ளங்கியையோ, அதன் கீரையையோ வெறுக்காமல், அவ்வப்போது உணவில் முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரையை சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்வதைத் தடுக்கலாம்.
கோடை காலத்தில் முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கோடை காலத்தில் ஏற்படும் உடல் வெப்பத்தை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
முள்ளங்கி சாறு மூல நோயை குணப்படுத்தும். முள்ளங்கியை நன்றாக வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் முழுவதுமாக கரையும்.
முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராக வைக்கும்.
முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்
மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பையினை சரி செய்யும்.
முள்ளங்கியில் அதிகளவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மூலநோய், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.
முள்ளங்கியை சேர்த்துக்கொள்வதால் சிறுநீர் நன்கு வெளியேறும். இதனால் சிறுநீர் பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
முள்ளங்கிக்காயை போல் முள்ளங்கி கீரையிலும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.