0 0
Read Time:3 Minute, 44 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் குருவை நெல்லை கொள்முதல் செய்வதற்காக 82 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அறிவித்துள்ள நிலையில், குருவை சீசனில் வழக்கமாக செயல்படும் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தால் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மூட்டைகள் தரம் குன்றி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட செருதியூர், முளைபாக்கம், நலத்துக்குடி, ஆனந்தகுடி மன்னம்பந்தல், மாப்படுகை உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல்லை முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் நேரில் பார்வையிட்டு தற்போதைய நிலைமை குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ எஸ் மணியன், 82 இடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் விளைவித்த நெல்மணிகள் விற்பனை செய்ய முடியாமல் மழையில் நனைந்து வீணாகிறது. ஆனால் உணவுத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று பேசுகிறார். பயிர் இன்சூரன்ஸ் கட்டுவதற்கு கடைசி நாள் முடிவடைந்த நிலையில் சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.

இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை விவசாயிகள் கட்டாமலேயே நாங்கள் பயிர்கள் பாதிக்கப்பட்டால் இன்சூரன்ஸ் வழங்குவோம் என்று அமைச்சர் எவ்வாறு கூறுகிறார் என்று தெரியவில்லை என்று கூறிய ஓ.எஸ்.மணியன் இதுகுறித்து சட்டமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேள்வி எழுப்பப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியின்போது மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ் பவுன்ராஜ், மயிலாடுதுறை ஒன்றியக் கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை ஒன்றிய கழக செயலாளர் சந்தோஷ்குமார் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %