மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே தில்லையாடியில் அரசு மாணவர் மற்றும் மாணவியர் விடுதியை தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தில்லையாடியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ரூ.2 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு மாணவ- மாணவியர் விடுதியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தில்லையாடி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ் தலைமையில் செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் கலந்து கொண்டு குத்துவளக்கேற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
இதில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) திருமலை கண்ணன், தாட்கோ செயற்பொறியாளர் ஆர்.உதயராமன், ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் கே. இளங்கோ, விடுதி காப்பாளர்கள் ரவிச்சந்திரன், ஜுவன்தி, ஒப்பந்தக்காரர் ஜே.கே.செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.