1 0
Read Time:2 Minute, 25 Second

புதுச்சேரி மீனவா்கள் சுருக்குமடி வலையுடன் கடலூருக்குள் நுழைவதை தடுக்க, கடலூர் கடல் பகுதியில் அதிகாாிகள் விடிய விடிய ரோந்து பணி மேற்கொண்டனா்.

புதுச்சேரி மாநிலம் நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் கிராம மீனவர்களுக்கிடையே சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதனால் புதுச்சேரியை சோ்ந்த சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் கடலூர் மாவட்ட கடல் பகுதிக்குள் படகுகளுடன் நுழைய முயன்றனா். இதுபற்றி அறிந்த கடலோரக் காவல் குழுமம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், புதுச்சோி மாநில மீனவா்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்.

இந்த சம்பவத்தால், கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் கடற்கரையோர கிராமங்களில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா்.இந்த நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் புதுச்சேரி மாநில மீனவா்கள் படகுகளுடன் கடலூர் துறைமுகத்திற்குள் நுழையாதவாறு தடுக்க மீன்வளத்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன் தலைமையில் ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் பிரபாகரன், மேற்பார்வையாளர் அறிவேந்தன், கடல் சட்ட அமலாக்க பிரிவு சாம்பசிவம் மற்றும் போலீசார் இணைந்து கடலூர் துறைமுகம் அருகே உள்ள கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விடிய விடிய விசைப்படகுகளில் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %