Read Time:1 Minute, 16 Second
சென்னையில் சாலை அமர்ந்து போராட்டம் நடத்திய அதிமுக எம்.எல்.ஏ.க்களை இன்று கைது செய்த காவல்துறையினர் விடுவித்தனர்.
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கலைவாணர் அரங்கம் வெளியே மெரினா – வாலஜா சாலையில் அமர்ந்த பேரவை உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தற்போது விடுவித்துள்ளனர்.