0 0
Read Time:2 Minute, 31 Second

கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே இன்று  5.5 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், 1.5 டன் எடையுடன் கூடிய மூன்று வயது திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் புதுப்பட்டினம் பகுதி வன காவலர் செல்லையா தலைமையில் வனத்துறை ஊழியர்கள்,  கடலோர காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கரை ஒதுங்கி இருந்த திமிங்கல சுறாவை பார்வையிட்டு, திமிங்கிலம் படகில் அடிபட்டு இறந்ததா? அல்லது மீனவர்கள் வலையில் சிக்கி இழந்துள்ளதா? அல்லது பிளாஸ்டிக் நெகிழி உள்ளிட்ட பொருட்களை விழுங்கியுள்ளாதா? என இறந்ததற்கான காரணம் குறித்து   விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மாதானம் கால்நடை துறை மருத்துவர் மணிமொழி கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார். இதனையடுத்து இறந்த திமிங்கிலத்தை வாகனத்தில் ஏற்றிச் சென்று புதுப்பட்டினம் வனத்துறையினரின் சொந்தமான காட்டில் புதைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %