0 0
Read Time:2 Minute, 27 Second

நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்த நிலையில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக பள்ளிகளின் இன்று முதல் தொடங்கி உள்ளன.  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கனிசமான மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு படையெடுத்தனர். வீட்டிலேயே இருந்து பாடம் படித்து நண்பர்களுடன் சேர்ந்து படிக்க முடியாத நிலை மாறப்போவதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை அருகே நீண்ட இடைவேளைக்குப் பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில்  மாணவ மாணவிகள் இன்று பள்ளி திறத்தை முன்னிட்டு ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்.

கொரோனா பொது முடக்கத்தில் காரணமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று பள்ளி திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை அப்பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து பூ, பழம் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து ஆசிரியர்கள்  கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க மாணவர்களும் அதனை பின்பற்றி உறுதிமொழி ஏற்றனர். பின்னர் மாணவர்கள் முகக் கவசம் அணிந்தபடி அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %