சீர்காழி அருகே ஆத்துகுடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆத்துகுடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி நேற்று விவசாயிகள் மயிலாடுதுறை சாலை சாத்துக்குடி கடைவீதியில் சாலையில் நெல்லை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஆண்டுதோறும் சம்பா மற்றும் குறுவை சாகுபடி காலங்களில் ஆத்துக்குடி கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும். இந்தநிலையில் இந்த ஆண்டு இதுநாள் வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் சீர்காழி – மயிலாடுதுறை சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் கிராமம் அய்யனார் கோவில் களத்தில் கடந்த 7 ஆண்டுகளாக திறந்தவெளி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் இல்லாததால் தற்போதைய குறுவை பருவத்துக்கு கொள்முதல் நிலையம் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால், அந்த பகுதி விவசாயிகள் இணைந்து அந்த களத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைத்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து ஒரு மாதமாக கொள்முதல் நிலையத்தில் காத்திருந்து வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனுவும் அளித்துள்ளனர். இந்தநிலையில் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலை மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ – மாணவிகள் பஸ்சில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்தே சென்றனர். போராட்டத்தின் போது அவசர சிகிச்சைக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஒன்றுக்கும்,, காரில் சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கும் வழிவிட்டு தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை தாசில்தார் ராகவன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து
இதேபோல மயிலாடுதுறை-சீர்காழி சாலையில் ஆத்துக்குடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் தலைமையில் விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் ராகவன் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை-சீர்காழி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Read Time:5 Minute, 34 Second