0 0
Read Time:2 Minute, 5 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நெல்லை கொள்முதல் செய்வதற்கு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 87 இடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தால் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான மூட்டைகளுடன் காத்திருக்கின்றனர். மங்கைநல்லூர் அடுத்த தத்தங்குடி கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத காரணத்தால் விவசாயிகள் சொந்த செலவில் தகரக் கொட்டகை அமைத்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகளுடன் காத்திருக்கின்றனர்.

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத காரணத்தால் மங்கைநல்லூர் கடைவீதியில் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் நெல் மூட்டைகளை வீதியில் அடுக்கி அதன்மேல் அமர்ந்து அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் 3 மணி நேரத்துக்கும் மேலாக மயிலாடுதுறை திருவாரூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %