0 0
Read Time:1 Minute, 30 Second

செப்டம்பர் 1 முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவைப் பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் கோரிக்கையை ஏற்றுச் உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

பொதுக் காப்பீட்டுக் கழகம் தாக்கல் செய்த மனுவில், உத்தரவைச் செயல்படுத்தக் காப்பீட்டு நிறுவனங்கள் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்று, மென்பொருளில் மாற்றம் செய்ய 90 நாள் ஆகும் என்பதால் உத்தரவைச் செயல்படுத்தக் காலநீட்டிப்பு கோரியது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் கோரிக்கையை ஏற்றுத் தனது முந்தைய உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13ஆம் நாளுக்கு ஒத்தி வைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %