0 0
Read Time:2 Minute, 31 Second

சிதம்பரம் அருகே பெரியப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் கடலூர் நோக்கி புறப்பட்டது. இந்த வாகனத்தை அமரன்(வயது 30) என்பவர் ஓட்டினார். இதேபோல் கடலூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சிதம்பரம் நோக்கி புறப்பட்டது. பெரியப்பட்டு 5 கண் மதகு அருகே வந்தபோது அரசு பஸ்சும், தீயணைப்பு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இ்ந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. தீயணைப்பு வாகனத்தின் முன்பகுதியும் சேதமானது. இது பற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதி மக்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சிதம்பரத்தை சேர்ந்த கற்பகம்(50), சித்தாலப்பாடியை சேர்ந்த கோபால்(43), விழுப்புரத்தை சேர்ந்த பிரபாவதி(52), வயலூரை சேர்ந்த குணசேகரன்(57) உள்பட 13 பேர் காயமடைந்தனர். இவர்களில் 7 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 6 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். இதற்கிடையில் விபத்துக்குள்ளான 2 வாகனங்களும் நடுரோட்டில் நின்றதால் கடலூர்- சிதம்பரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகே போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %