0 0
Read Time:7 Minute, 43 Second

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள் மற்றும் தண்ணீர் குடிப்பதின் முக்கியத்துவம்!

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.

மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.

எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
குடல் சுத்தமாகும்.

நமது உடலில் உள்ள நச்சப் பொருட்கள் மற்றும் சிறுநீர், வியர்வை வழியாக உடலில் உற்பத்தியாகும் பிற தேவையற்றவற்றை வெளியேற்றவும் தண்ணீர் உதவுகிறது. நமது செல்களுக்கு சத்துக்களை எடுத்துச் செல்லவும் மற்றும் காது, மூக்கு, தொண்டை பகுதிகளை ஈரப்பதமாக வைத்திருக்கவும் தண்ணீர்; உதவுகிறது. தண்ணீரின் அளவு குறைந்தால், உங்களுடைய உடல் தளர்ந்து விடும்.

குறைந்த அளவில் இந்த பிரச்சனை வந்தால் கூட அது உங்கள் சக்தியை உறிஞ்சி தளரச் செய்துவிடும். ‘நான் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?’ என்று கேட்பது பலரிடமும் உள்ள கேள்வி. அது ஒவ்வொரு மனிதரும் வசிக்கும் பருவநிலை, புவியியல் அமைப்பு, வாழ்க்கை முறை போன்ற காரணிகளைப் பொறுத்தது. நீங்கள் வெப்பமண்டலப் பகுதிகளில் வசித்து வந்தால், இலண்டனில் வசிப்பவரை விட அதிக அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். வெப்பமான பருவநிலையில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால் நிறைய தண்ணீர் குடித்து உடலை புதுப்பிக்க வேண்டியிருக்கும். அதே போல, விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களும் மற்றும் கடினமான உடலுழைப்புகளில் ஈடுபடுபவர்களும் அவர்களுடைய உடலின் நீர்ம அளவை பராமரிக்கும் பொருட்டாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும்.

இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும்.

தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும்.
பசியைத் தூண்டும்

தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.இரத்த செல்கள் உற்பத்தியாகும்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
தலைவலியை தடுக்கும்

பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும்.
அல்சரைத் தடுக்கும்

காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.
எடையை குறைக்க உதவும்

எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
பொலிவான சருமத்தைக் கொடுக்கும்

குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.

எடையை குறைக்க உதவும் எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

தண்ணீரை காலை எழுந்தவுடன் குடிக்க அது வாய் துர்நாற்றத்தை தடுக்கும் மற்றும் பற்களில் இருக்கும் நாசினிகளையையும் சேர்த்து வெளியேற்றும், புத்துணர்ச்சியை கொடுக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.

தண்ணீரை குடிக்கும் போது வாய் வைத்தே குடிக்க வேண்டும். தண்ணீரை குடிப்பதனால் அது உடம்பில் உள்ள அசுத்த நீரை வியர்வையாக வெளியேற்றும்.

காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடன்ல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %