0 0
Read Time:2 Minute, 32 Second

வேதாரண்யம் அருகே போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திரும்ப ஒப்படைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 38). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் கார்த்திகேயனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பரிசோதனை முடிந்த பிறகு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் போலீஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை கீழே இறங்கி வருமாறு கூறினர். அப்போது அவர், போலீசார் தன்னிடம் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திரும்ப ஒப்படைத்தால்தான் கீழே இறங்கி வருவேன் என கூறினார். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு கார்த்திகேயன் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். 

இதுதொடர்பாக கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திரும்ப ஒப்படைக்கக்்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %