0 0
Read Time:6 Minute, 20 Second

தென்காசி மாவட்டத்தில் முத்திரைதான் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி! . மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்!

தென்காசி செப்.6. தென்காசி மாவட்டத்தில் 20 ரூபாய் மதிப்பிலிருந்து 25000 ரூபாய் மதிப்பிலான முத்திரை தாள் தட்டுபாடு கடுமையாக நிலவி வருகிறது கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து கடையநல்லூர் நகராட்சி முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும் மகளிர் அணி துணை அமைப்பாளருமான தமிழ் செல்வி முருகேசன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் பத்திர பதிவு துறை அமைச்சர் மாண்புமிகு மூர்த்தி அவர்களுக்கும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. கடந்த மூன்று மாதங்களாக தென்காசி மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கடையநல்லூரிலும் முத்திரை தாள் விற்பனை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகள் திறந்துள்ள நிலையில் பிற்பட்ட மாணவ மாணவிகள் இந்த கல்வி ஆண்டிற்கான கல்வி உதவி தொகை பெறவும் மேலும் தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை பெறவும் உறுதி மொழி ஆணையர் நோட்டரி பப்ளிக் ஆவணச் சான்று பெற கடன் பெற என பொதுமக்களின் அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 20 ரூபாய் முத்திரை தாள் அவசியமாகிறது அதே போல் தற்போது கொரானா தொற்று பரவலுக்குப் பின் தொய்வடைந்திருந்த ரியல் எஸ்டேட் . விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.20 ரூபாய் நூறு ௹பாய் ஆயிரம் ரூபாய் ஐயாயிரம் ரூபாய் மற்றும் இருபத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் மூன்று மாதங்களாக கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

மேலும் பத்திர பதிவின் மூலம் கடையநல்லூர் நகராட்சிக்கு வர வேண்டிய வரி ஒரு சில போலி புரோக்கர்களால் கடையநல்லூர் சரக எல்கை பதிவுகள் அருகிலுள்ள புளியங்குடி வாசுதேவ நல்லூர் சிவகிரி இடை கால் வீரசிகாமணி போன்ற ஊர்களில் பதிவு செய்யப்பட்ட இடங்கள் போலி என தெரிந்து தினமும் காவல் நிலையங்களிலும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிப அபகரிப்பு தடுப்பு பிரிவிலும் புகார்கள் பதிவு செய்யப் பட்டு ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருந்து வருகின்றன குறிப்பாக காக்கா ” (H ACA ) கமிட்டியால் தடை செய்யப்பட்ட இடங்கள் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இடை கால் நயினாரகரம் கிராமம் அச்சம் பட்டி பகுதி மற்றும் கடையநல்லூர் கிராமம் மஸ்தான் பள்ளி கிருஷ்ணாபுரம் புதிய விரிவாக்க பகுதிவிஷால் நகர் போன்ற இடங்களில் விதிமுறைகள் மீறி பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது நூறு ஆண்டுகள் பழமையான சிவகிரி ஜமீன் கோட்டை அரண்மனையை இடை கால் பகுதியை சார்ந்தவர் சிவகிரி சார் பதிவகத்தில் பத்திரம் பதிவு செய்துள்ளார்.

அந்தசார் பதிவாளர் இதே போன்று 200க்கும் மேற்பட்ட போலி பத்திரங்கள் பதிவு செய்தது தெரிந்து அவர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டு பத்திர பதிவு துறை தலைவரின் நேரடி விசாரணையில் உள்ளது போலி பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்கி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் தட்டுபாடின்றி முத்திரைதான் கிடைத்திடவும் அங்கீகரிக்கப்பட்ட முத்திரைதாள் விற்பனையாளர் தவிர பெட்டிக்கடைகளிலும் வீடுகளிலும் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கையும் பத்திர பதிவு அலுவலங்களில் மறைமுகமாக நடைபெறும் லஞ்ச ஊழலை தவிர்க்க வழிகாட்டி மதிப்பை பொதுமக்கள் பார்வைக்கு பதிவாளர்கள் வைத்திட வேண்டும் அறி வுறுத்தப்பட வேண்டும்.

மேலும் போலி பத்திரங்களை உருவாக்கும் பத்திர எழுத்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் பத்திர பதிவு எழுத்தர்களில் சிலர் இடைத்தரகர்களாக செயல் படுவதுடன் பொதுமக்களிடம் கண்மூடித்தனமாக எழுத்துக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதை ஒரு பக்கத்துக்கு இவ்வள்வு ரூபாய் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %