0
0
Read Time:1 Minute, 13 Second
திருவாரூர்:விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி
திருவாரூரில் இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
மாவட்ட செயலாளர் P.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார். இதில், நாகை மாவட்ட பொதுச் செயலாளர் ஆறு. பார்த்திபன், ஒன்றிய நிர்வாகிகள் ஜோதிபிள்ளை, சிங்காரவேலு, ராஜா, வினோத், விஜயகுமார், காளிமுத்து , மகளிரணி செயலாளர் அமுதா, சிறப்பு அழைப்பாளர்களாக ரங்கதாஸ் நைனா,SS சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.