0 0
Read Time:4 Minute, 0 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமை வகித்தார் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.

கல்விக்கும் தமிழுக்கும் புகழ் சேர்க்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குகின்ற கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. ஆசிரியர் தினத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவர்களையும் நல்ல புத்திசாலியாக உருவாக்குகிற பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. போட்டித் தேர்வில் பங்கேற்க மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

கொரோனா நோய் பெருந்தொற்று காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இணைய வழியில் கல்வி பயிற்றுவித்து வருகிறார்கள். இது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், இணைய வழி கல்வி பயிற்றுததிலும் ஆசிரியர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இணையவழியில் ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவிக்கும் போது மாணவ – மாணவிகளிடம் கைபேசியை இணைய வழி கல்வி மட்டுமே பயன்படுத்தவும் மற்ற நேரங்களில் கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்கவும் என்று எடுத்துக் கூறவும். மாணவர்களின் எதிர்கால கனவை கல்வியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர் ச.முரளிதரன், சீர்காழி வட்டம் இனம்சீயாளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.சண்முகசுந்தரம், மங்கைமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.ராஜசேகர், கொருக்கை அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அ.அப்துல் ரஹீம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பா.ஜோஸ்வா பிரபாகர சிங் ஆகிய 5 ஆசிரியர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கிய நல்லாசிரியர் விருதினை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் மாவட்ட கல்வி அலுவலர் குமார் மாவட்ட ஆட்சியராக மேலாளர் சங்கர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %