0 0
Read Time:2 Minute, 24 Second

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் வணிக வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் உதயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், 1,600 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

image

இதையடுத்து நகைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், நகைகளை பறிமுதல் செய்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் நடைபெற்ற விசாரனையில் சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த நகை வியாபாரி ரமேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான நகை என்பதும் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை பகுதியில் கொடுக்க வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சென்னையிலிருந்து ரமேஷ்குமாரை வரவழைத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் 300 கிராம் தங்க நகைக்கு மட்டுமே ஆவணம் உள்ளது. மேலும் ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள 1,300 கிராம தங்க நகை குறித்து திருச்சி வணிகவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில வரி அலுவலர் ராஜசேகர் தலைமையிலான வணிக வரித்துறையினர் நேரில் வந்து ரமேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %