0 0
Read Time:3 Minute, 1 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று பள்ளி மாணவர்களுக்கும் ஒரு பள்ளி முதல்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும்  கொரோனா பரவலின் விகிதம் மிகவும் குறைவாக உள்ளதால், பள்ளி வழக்கம் போல செயல்பட சுகாதார துறையினர் அனுமதித்துள்ளனர். மயிலாடுதுறை தனியார் மெட்ரிக். பள்ளி மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பள்ளி முதல்வருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளது, அதனையடுத்து மாணவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

மயிலாடுதுறையில் 3 மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா - தொடர்ந்து பள்ளிகள் இயங்க அனுமதி...!

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அந்த மாணவருடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 57 பேருக்கு  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வெளியானதில், பள்ளி முதல்வருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது.  இதேபோல, மயிலாடுதுறை நகரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவருக்கும் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதையொட்டி, அவ்வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் ரேண்டம் அடிப்படையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 117 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மற்ற யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. அதனால் அப்பள்ளியும் வழக்கம் போல் செயல்படுகிறது.

மயிலாடுதுறையில் 3 மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா - தொடர்ந்து பள்ளிகள் இயங்க அனுமதி...!

மேலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆயங்குடி பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து சக மாணவர்களிடம் பரிசோதனை செய்ததில் யாருக்கும் மற்ற மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டாததால் அப்பள்ளியும் தொடர்ந்து செயல்பட சுகாதார துறையினர் அனுமதித்துள்ளனர்.

source: abp

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %