0 0
Read Time:5 Minute, 37 Second

’’மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 41,235 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 41,235 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய அளவில் கொரோனா தடுப்பூசிகள் உள்ளதால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறையால் இலக்கை எட்டாமல் போன மயிலாடுதுறை மாவட்டம்...!

நாடுமுழுவதும்  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய மாநில அரசு முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி கோவாக்ஸின், கோவிஷுல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் மூலமாக வழங்கி பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ் நாட்டில் மூன்றாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அதிவேகமாக தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. அதனையடுத்து நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்த இலக்கு நிர்ணயித்து தடுப்பூசி முகாகளை அமைத்து தடுப்பூசி செலுத்தினர்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை 12 மணிநேரம் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதற்காக மாவட்டம் முழுவதும் ஐந்து ஒன்றியங்களில் 406 ஊராட்சிகள், இரண்டு நகராட்சிகளில் 22 இடங்கள், 4 பேரூராட்சிகளில் 24 இடங்கள், 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 மருத்துவமனைகள் 10 நடமாடும் தடுப்பூசி குழுக்கள் என மொத்தம் 499 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தியது. 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முதலில் திட்டமிட்டு அது குறித்து மக்களுக்கு பல்வேறு விளம்பர அறிவிப்புகள் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை தடுப்பூசி வரத்து குறைவு காரணமாக கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு, 30000 ஆக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும 499 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமின் முடிவில் 41,235  நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறையால் இலக்கை எட்டாமல் போன மயிலாடுதுறை மாவட்டம்...!

முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட தாலுக்காவில் உள்ள ஒருசில கிராமங்களில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்  வர இருப்பதால் பொதுமக்கள் தடுப்பூசி இருப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %