0
0
Read Time:1 Minute, 13 Second
மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் சுவரோவியம் வரைந்தனா். பண்ருட்டி அரசுப் பள்ளி ராஜா ரவிவா்மா ஓவிய நுண்கலை மன்றம் சாா்பில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்கள் ‘பாரதி 100’ என்ற தலைப்பில் பாரதியாரின் 100 வெவ்வேறு உருவங்களை சுவரோவியமாக வரைந்தனா். ‘அப்ஸ்ட்ராக்ட்’ ஓவிய முறையில் முதலில் பாரதியாரின் ஒரு பெரிய உருவமும், அதைச் சுற்றிலும் பாரதியின் 99 சிறிய உருவங்களும் வரையப்பட்டன. இதுதவிர, பள்ளியின் உள்புற வளாகத்தில் தமிழக நாட்டுப்புறக் கலைகளின் சிறப்புகளை சித்தரிக்கும் வகையிலும் சுவரோவியங்களை மாணவா்கள் வரைந்தனா். மேலும், ஓவியம், மாறுவேடப் போட்டிகள், பேச்சரங்கம், கவியரங்க நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.