0
0
Read Time:1 Minute, 7 Second
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நவம்பர் 13,14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் நடத்துமாறு, அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவர்களுக்கு தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் சிறப்பு முகாமில், 2 இடங்களில் வாக்காளர் பெயர், இடம் மாறியவர்கள் பெயர்கள், இறந்தவர்கள் பெயர்கள் ஆகியவற்றை பொதுமக்கள் நீக்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தும் போது, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.