நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது வேதனை கொடுப்பதாக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாவட்டத்தில் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்த நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பதற்றத்தில் அரியலூரைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மாணவி கனிமொழி தற்கொலை குறித்து திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் – வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் – சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஒன்றியத்தின் நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது’ எனப் பதிவிட்டுள்ளார்.
நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் – வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் – சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஒன்றியத்தின் நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது.