0 0
Read Time:9 Minute, 56 Second

உணவே மருந்து: தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!. கேரட் மருத்துவ குணங்களும் பயன்களும்!!

கேரட்டில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

கேரட் அதன் சுவைக்கு ஏற்ப ஆரோக்கியத்திலும் சளைத்ததல்ல. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

அதில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய கிருமிகளை உருவாக்குகிறது.

இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும் : இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.

கண்களுக்கு நல்லது: கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

உடல் எடையைக் குறைக்கும் : குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்-ல் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது.

புற்றுநோய் பாதிப்பு இல்லை: புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

சருமம் பளபளக்கும்: உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

கண் பார்வை:கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால் கண் பார்வை அதிகரிக்கும்.

மாலைக்கண் நோய் நீங்க:வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் உண்டாகும் மாலைக்கண் நோயை குணமாகும் கேரட்.

சருமம் பொலிவடைய:வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. இதிலிருந்து பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தருகிறது.

மூட்டு வலி குணமாக:வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள கேரட்டை உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி சரியாகும்.

கேரட் தினமும் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்:

கண் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து கண்ணுக்கு நல்ல கூர்மையான பார்வை அளிக்கிறது.
மரபணு பாதிப்புகள், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை தவிர்த்து ஆன்டி – ஆக்சிடண்டாக செயல்படுகிறது.
இதய நரம்புகளில் படியும் கொழுப்புகளை தவிர்த்து, இதயத்துக்கு பலத்தை கொடுக்கிறது.
பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
மூளை திறனை மேன்படுத்தும்.

நீரிழிவிலிருந்து பாதுகாப்பு:டாக்டர்கள் நடத்திய ஆய்வில் கேரட் சாப்பிடுவதால் டைப் 2 ரக நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் சக்தி படைத்தது கேரட் என்பது தெரியவந்துள்ளது.

நார்ச்சத்து:நம் உடலில் உள்ள திடக்கழிவுகளை நீக்குவதில் நார்ச்சத்து பங்கு வகிக்கிறது. கேரட்டை உட்கொள்வதன் மூலம் நார்ச்சத்து அதிகரிக்கும்.

புற்றுநோய் தடுப்பு:புற்றுநோயை தடுக்கும் திறன் கேரட்டில் உள்ளது. மேலும் மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு கேரட் மிகவும் பயனுள்ளது.

காயம் ஆற: உடலில் ஏற்படும் வீக்கம், வலி போன்றவற்றிக்கு கேரட்டை அரைத்து பற்று போட்டால் சரியாகும்.

ரத்த கொழுப்பு குறைய: ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைத்து, நல்ல ரத்த ஓட்டத்தை தருகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு: சர்க்கரை நோய் உள்ளவர்கள், கேரட்டை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.


ஆண்கள் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:

ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
விந்தணுவின் அளவை அதிகரிப்பதோடு தரத்தையும் அதிகரிக்கும்.
செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து தீர்வு கிடைக்கும்.
வாயு தொல்லையை நீக்கும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மலச்சிக்கலை சரிசெய்யும்.

கேரட்டுடன் ஏலக்காய்:கேரட்டுடன் ஏலக்காயை போடி செய்து பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். புத்துணர்வு கிடைக்கும்.

கேரட் எலுமிச்சை:கேரட்டை எலுமிச்சை சாற்றுடன் பாலில் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

இன்சுலின் அதிகரிக்க:தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால் இன்சுலின் அதிகமாக சுரக்கும்.

சிறுநீர் எரிச்சல் குணமாக:சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறவர்கள் தினமும் கேரட் சாப்பிட வேண்டும்.

உடல் எடை குறைய:உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடலை ஆரோக்கியமாகவும் திடனாகவும் வைக்கிறது. உடல் எடையை குறைத்து மெலிவான தோற்றத்தை தருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு:கேரட்டுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

ரத்த கொழுப்பு குறைய:ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை நீக்கி சீரான ரத்த ஓட்டத்தை தருகிறது .

மூளை திறன் அதிகரிக்க:கேரட் சாப்பிடுவதன் மூலம் மூளையின் திறனை அதிகரித்து , சுறுசுறுப்பாக செயல்பட செய்கிறது.

இளமையான தோற்றம் பெற:முதுமையை உண்டாகும் செல்களை புதுப்பித்து இளமையான தோற்றத்தை தரும்.

பக்கவாதம் சரியாக:பக்கவாதம் உள்ளவர்கள் கேரட்டை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் சரியாகும்.

கிருமிகள் நீங்க:உடலில் உள்ள கிருமிகளை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

கொழுப்புகள் குறைய:உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உடலை சுத்தமாக வைக்க உதவுகிறது.

கேரட்டுடன் முட்டை:கேரட்டுடன் முட்டை மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.

பொலிவான சருமம் பெற:தோளில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது செல்களை உருவாக்கி உலர்ந்த சருமத்தை நீக்கி பொலிவான தோற்றத்தை தருகிறது.

தாய்ப்பால் அதிகரிக்க:கேரட் விதையை பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

பற்களுக்கு:பற்களில் ஏற்படும் ரத்த கசிவு, பற்கள் வலுவின்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

ஆலிவ் எண்ணையுடன் கேரட்:ஆலிவ் எண்ணையுடன் கேரட்டை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்படையும்.

அழகான கூந்தல்:பெண்களுக்கு அழகூட்டும் கூந்தலை பராமரிப்பது பெண்களுக்கு பெரும் பாடாக இருக்கிறது. இதற்கு தீர்வு தரும்வண்ணம் கூந்தலை பாதுகாத்து அழகான கருமையான கூந்தலை தருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %