0 0
Read Time:3 Minute, 46 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அகர திருக்கோலக்கா தெருவைச் சேர்ந்தவர் சாராய வியாபாரியான பாபு. இவர் மீது சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக பல வழக்குகள் சீர்காழி காவல்நிலையத்தில் உள்ளது. இந்நிலையில் சாராய விற்பனையில் தொடர்பாக இவருக்கு சீர்காழி சேர்ந்த ரவுடி கட்டை ராஜாவிற்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் சாராய வியாபாரி பாபுவை  கொலை செய்ய திட்டம் தீட்டிய ரவுடி கட்டை ராஜா அவரது நண்பர்களான கூலி படை நபர்களுடன் நான்கு பேர் நேற்று இரவு சாராய வியாபாரி பாபுவின் வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்ய முயற்சி செய்து உள்ளனர்.

மயிலாடுதுறை: சாராய வியாபாரியை கொல்ல முயற்சி- ரவுடியை கட்டி வைத்து குமுறிய பொதுமக்கள்..!

கத்தியுடன் ரவுடி கும்பல் வீட்டில் நுழைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டிற்குள் நுழைந்த போது ஊர்மக்களை கண்ட கூலிப்படையை சேர்ந்த நான்கு பேரும் கையில் கத்தி, அரிவாளுடன் அங்கிருந்துத்து தப்பித்துச் சென்றனர். அதில் மூன்று பேர் தப்பி ஓடிவிட சீர்காழியை சேர்ந்த ரவுடி கட்டை ராஜா மட்டும் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டான்.

மயிலாடுதுறை: சாராய வியாபாரியை கொல்ல முயற்சி- ரவுடியை கட்டி வைத்து குமுறிய பொதுமக்கள்..!

இதனைத் தொடர்ந்து அவனை பொதுமக்கள் தெருவில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக உதைத்து சீர்காழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்தது காவல்துறையினர் கட்டை ராஜா கைது செய்து சீர்காழி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் இதுகுறித்து சீர்காழி காவல்நிலையத்தில் ரவுடி கட்டை ராஜா மீது வழக்குபதிவு செய்து, தப்பி ஓடிய மற்ற மூன்று பேரை தீவிரமாக  தேடி வருகின்றனர். மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற  இச்சம்பவம் சீர்காழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: சாராய வியாபாரியை கொல்ல முயற்சி- ரவுடியை கட்டி வைத்து குமுறிய பொதுமக்கள்..!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக போதை பொருட்களையும் சாரயத்தையும் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் குழுக்கள் அதிகரித்துள்ளன. இக்குழுக்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் உருவாவதும், இக்குழுக்கள் குறித்து காவல்துறையில் புகாரளிக்கும் நபர்களை கூலிப்படையை ஏவி கொலை செய்யும் நிகழ்வுகளும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை குறித்து காவல்துறையில் புகாரளித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் வசிம் அக்ரம் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

source:abp

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %