அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய். ஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ பயன்கள்!!
தினமும் உணவு சாப்பிட்டுமுடித்தவுடன் ஒன்றிரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய், ஈறுகள் மற்றும் பற்கள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமநிலையின்மை, வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற அணைத்து பிரச்சனைகளும் நீங்க சிறிதளவு ஏலக்காய்களை சர்க்கரையுடன் சேர்த்து நன்கு பொடித்து, தினமும் காலையில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்திருக்கும் நபர்களுக்கு, அவர்களின் ரத்த குழாய்களில் ரத்தம் கட்டி கொண்டு ரத்த ஓட்டம் சரிவர நடைபெறாமல் இதய பாதிப்பு, உடலின் பாகங்கள் செயலிழப்பது போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு ஏலக்காய்களை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
புகை பழக்கத்தை நிறுத்திய நபர்கள் பலருக்கும் மீண்டும் மீண்டும் புகை பிடிக்க தூண்டும் உணர்வு ஏற்படும். அச்சமயங்களில் சிறிதளவு ஏலக்காய்களை முழுதாகவோ அல்லது பொடித்தோ வாயில் போட்டு மென்று வந்தால் மெல்ல மெல்ல புகை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.
சீரண சக்தியை அதிகரிக்கிறது
ஏலக்காய் ஒரு மசாலா பொருளாக மட்டும் இல்லாமல் மூலிகை பொருளாகவும் பயன்படுகிறது. இது நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து பித்த நீரை அதிகரித்து சீரண சக்தியை அதிகரிக்கிறது. எதுக்களித்தல், வாய்வு தொல்லை போன்றவற்றை சரியாக்குகிறது.
இதயத்திற்கு நல்லது
ஏலக்காய் உங்கள் உடலில் தங்கியுள்ள கொழுப்பை கரைக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
ஏலக்காயை தினமும் எடுத்து கொள்ளும் போது நமது உடலில் லிப்பிட்டை அதிகரித்து இரத்தம் கட்டாமல் தடுக்கிறது. எனவே இது பக்க வாதத்தை தடுக்கிறது.
இதற்கு பச்சை ஏலக்காய் விட கருப்பு ஏலக்காய் மிகவும் சிறந்தது.
மன அழுத்தத்தை எதிர்த்து போராடுதல்
நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால் போதும் உங்கள் மன அழுத்தம் காணாமல் போய்விடும்.
ஆஸ்துமாவை குணப்படுத்துதல்
பச்சை ஏலக்காய் உங்கள் சுவாசத்தை சரியாக்குகிறது., மூச்சுத் திணறல், இருமல், மூச்சை குறைவாக இழுத்தல், ஆஸ்துமா அறிகுறிகள் போன்றவற்றை தடுக்கிறது
டயாபெட்டீஸ் வராமல் தடுத்தல்
ஏலக்காயில் உள்ள மாங்கனீஸ் சத்து டயாபெட்டீஸ் வாராமல் தடுக்கிறது. ஆனால் இதைப் பற்றிய ஆராய்ச்சி போய்க் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் முடிவு பண்ணவில்லை
வாய் ஆரோக்கியம்
நமது வாயில் உள்ள கெட்ட கிருமிகளை போக்குவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டெப்ட்ரோகோக்கஸ் மியூட்ன்ஸ் போன்ற பாக்டீயாக்களை அழிக்கிறது. உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கிறது. எனவே இது பல் இடுக்குகளில் படிந்த கரைகள், கிருமிகள் போன்றவற்றை அகற்றி வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
பசியின்மை பிரச்சினை பசியின்மை பிரச்சினை தான் பெரும்பாலான நோய்க்கு காரணமாக உள்ளது. புற்று நோய், அனோர்ஷியா போன்ற நோய்களுக்கு இது தான் காரணமாக உள்ளது. எனவே இதை தடுக்க உங்கள் உணவுகளில் ஏலக்காய் சேர்த்து கொண்டாலே போதும்.
சக்தி வாய்ந்த பாலுணர்வு ஏலக்காயில் உள்ள ஷைனோல் ஆற்றல் மிக்க நரம்புகளை தூண்டி ஆண்மையை அதிகரிக்கிறது.
விக்கலை நிறுத்துதல் உங்களுக்கு நிறுத்த முடியாத தொடர்ச்சியான விக்கல்கள் ஏற்பட்டால் ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால் போதும். உங்கள் விக்கல் பறந்து போய்விடும். ஏனெனில் இது விக்கல் உண்டாவதற்கான வால்வை ரிலாக்ஸ் செய்கிறது.
தொண்டைப் புண்களை சரி செய்தல் 1 கிராம் ஏலக்காய் +1 கிராம் பட்டை +125 மில்லி கிராம் கருப்பு மிளகு +1 டேபிள் ஸ்பூன் தேன் = தொண்டை புண் நிவாரணி மருந்து இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று தடவை எடுத்து கொண்டால் போதும் இருமல், தொண்டை புண் குணமாகி விடும்.