கடலூரில் போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். தற்போது ஒரே நேரத்தில் பள்ளிகள் விடுவதால் மாணவர்களால் பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது.
தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் 9,10,11, மன்றம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக செல்லாமல் தனித்தனியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என அரசு அறிவித்தது.
ஆனால், அறிவித்தபடி சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அனைத்து பள்ளிகளும் ஒரே நேரத்தில் விடுவதால் கடலூர் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பேருந்துக்காக ஒரே நேரத்தில் குவிந்து விடுகிறார்கள். இதனால் பேருந்து நிலையமே மாணவர்களால் நிரம்பி வழிகிறது.
பேருந்துகளை கண்டவுடன் மாணவர்கள் ஓடி ஓடி ஏற முயற்சிப்பது அங்கிருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. எனவே, காலை, மாலை வேளைகளில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென் வர கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.