0 0
Read Time:4 Minute, 0 Second

மயிலாடுதுறை காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் 66 வயதான புருஷோத்தமன் என்பவர் தனியாக 3 லட்சம் ரூபாய்க்கு வீட்டை குத்தகைக்கு எடுத்து கடந்த 7 ஆண்டுகளாக குடி இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டின் மீது கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் கடனை திருப்பி கட்டாததால் நிதி நிறுவனத்தினர் நீதிமன்றம் மூலம் அந்த வீட்டை ஜப்தி செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளனர். 

’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

இந்த சூழலில் நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, கடனை திரும்பச் செலுத்தமுடியாத வீட்டின் உரிமையாளர், நிதி நிறுவனத்தினரிடம் எனது வீட்டை ஜப்தி செய்துகொள்ளுங்கள் என தெரிவித்துவிட்டு சென்ற அவர். முதல் மாடியில் குத்தகைக்கு ஒருவர் குடியிருப்பதையும் அவருக்கு பணம் தரப்படவேண்டும் என்ற தகவலையும் வீட்டை ஜப்தி செய்ய வந்த நிதி நிறுவன ஊழியர்களிடம் சொல்லவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்ற நிதி நிறுவனத்தினர், முதல் தளத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ள புருஷோத்தமன்  தூங்கிகொண்டிருந்ததை அறியாமல் வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர். 

’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவரது மகன் சதீஷ் தனது தந்தை மாடியில் உள்ள நிலையில் வீட்டை சீல் வைத்துவிட்டனர் என்று  கூறியுள்ளார்.  இதையடுத்து தகவல் அறிந்து அங்கு  மயிலாடுதுறை காவல்நிலைய ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீசார் சென்று பார்த்தபோது, மாடியில் புருஷோத்தமன் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு உணவு வழங்கப்பட்டது, நிதி நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு இது நீதிமன்ற நடவடிக்கை என்றும் மாடியில் ஆள் இருந்தது தெரியாது என்றனர். உடனடியாக அவரை மீட்கவேண்டும் என்று போலீசார் கேட்டதும், நாகை நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனத்தினர் மயிலாடுதுறை சென்று மாடி பகுதிக்குச் செல்லும் கேட்டின் சீலை நீக்கி முதியவரை மாடியிலிருந்து அழைத்தனர், அப்போது என் பணம் 3 லட்சம் ரூபாய் என்னவானது என்று அவர் புலம்ப, அவரை கைத்தாங்கலாக அழைத்துகொண்டு வெளியே வந்தனர்.

’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

தொடர்ந்து அனைவரையும் மயிலாடுதுறை போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர், தனியார் நிதி நிறுவனத்தினர் கூறுகையில், இந்த வீடு ஜப்தி செய்து ஏலம் முடிந்ததும் புருஷோத்தமன் தொகை கிடைக்க  வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துச்சென்றனர். முதியவரை வீட்டிக்குள் வைத்து பூட்டி நிதி நிறுவனத்தினர் சீல் வைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %