கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். கடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்திய நிலையில், மாலை நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 30 நிமிடங்களை தாண்டி அடித்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் விருத்தாசலம், பெண்ணாடம் புவனகிரி, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதேபோல் நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 27 மில்லி மீட்டரில் மழை பதிவாகியது.
Read Time:1 Minute, 25 Second