சிதம்பரம்: தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தின விழாவில் பல்வேறு இடங்களில் சங்க ஐவண்ண அனுமன் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி. சேகர் தலைமை தாங்கினார். ஆர். பாவாடைபத்தர், ஆர். மாரியப்பன், டி. தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பி. முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தினத்தை முன்னிட்டு சின்னசெட்டி தெரு, விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெரு, மந்தங்கரை ஆகிய இடங்களில் உள்ள விஸ்வகர்மா கொடி கம்பங்களில் ஐவண்ண அனுமன் கொடியை ஏற்றி கொல்லர், தச்சர், கண்ணார், பொற்கொல்லர், சிற்பி ஆகிய படைப்பு தொழில்களில் உள்ள ஐந்தொழிலாளர்களுக்கும் விஸ்வகர்மா தின வாழ்த்துக்களை தெரிவித்து மாநில தலைவர் ஜி. சேகர் பேசினார்.
செப்டம்பர் 17 ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தினத்தை மத்திய மாநில அரசுகள் அரசு விடுமுறை விட்டு அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தி.மு.கழக தேர்தல் அறிக்கையில் விஸ்வகர்மா சமூகத்துக்கு நிறைவேற்றி தருவதாக சொன்ன வாக்குறுதிகளை தமிழக முதல்வர் உடனே நிறைவேற்றி தர வேண்டும். பேறு கால விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தி அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் எஸ். ரமேஷ், ஆர். இராமச்சந்திரன், எம். எஸ். ஆர். ரவி, எம். பாலசுப்பிரமணியன், எம். சுரேஷ், ஆர். தில்லைநடராஜன், எம். சிவக்குமார், ஜி. முருகன், ஆர். உமாபதி, ப. நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவில் நகர பொருளாளர் எஸ். ராஜ்குமார் நன்றி கூறினார்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.