மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி எடுத்து குட்டி ஆண்டு வரையில் கடலரிப்பு ஏற்பட்டு கடல் உள் புகும் அபாயம் உள்ளதால் கடலோர மீனவ கிராமங்களான தரங்கம்பாடி குட்டியாண்டியூர், சின்ன மாணிக்கபங்கு உள்ளிட்ட மீனவர் கிராமங்களை பஞ்சாயத்தார்கள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகனிடம் கோரிக்கை மனு அளித்து நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் கடற்கரையோரங்களில் பாதிப்பை எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் இந்த பாதிப்பின் குறித்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா என் முருகன் மீனவ பஞ்சாயத்தார்கள் அளித்த மனுவில் வைத்த கோரிக்கைகளை கூடிய விரைவில் வேலைக்கும் சரிசெய்து தருவதாக கூறினார்.
மேலும் இதில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், செம்பை ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர், தொழில் அதிபரும் திமுக பிரமுகருமான சந்துரு, மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் மீனவ கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.