0 0
Read Time:3 Minute, 23 Second

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திமுகவினர் விருப்பமனு அளிப்பு கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது அதைத்தொடர்ந்து இன்று குத்தாலம் மற்றும் செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர் அப்துல்மாலிக் அன்பழகன் தலைமையில் மங்கநல்லூர் மற்றும் சந்திரபாடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது.

வருகின்ற 9.10.2021 அன்று நடைபெற இருக்கின்ற காட்டுச்சேரி மற்றும் தத்தங்குடி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களாக தத்தங்குடி ஒன்றியக்குழு வேட்பாளராக ரமேஷ் ராக்கெட், காட்டுச்சேரி ஒன்றியக்குழு வேட்பாளராக செல்வம் ஆகியோர்களை மங்கைநல்லூர் மற்றும் பொறையாரில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். .

மேலும், இந்நிகழ்ச்சில் நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், அப்துல்மாலிக், அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், செம்பை ஒன்றிய துணைத் தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காட்டுச்சேரி, திருக்களாச்சேரி, சந்திரபாடி, தத்தங்குடி, கழனிவாசல், பொரும்பூர் உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், திமுக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் அறிமுக கூட்ட முடிவில் மங்கைநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் ரமேஷ் ராக்கெட் நன்றியுரை கூறினார். பொறையாரில் நடைபெற்ற கூட்டத்திந் முடிவில் வேட்பாளர் செல்வம் நன்றியுரை கூறினார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %