0 0
Read Time:3 Minute, 12 Second

கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செங்கல் சூளை தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் சூளைகளுக்கு சீல் வைப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு நாட்டு செங்கல் உற்பத்தியாளர் சங்க செயலாளர் தமிழ்க்குமரன், தலைவர் நெப்போலியன், கவுரவ தலைவர் அப்துல் ரகிம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சேகர், த.வா.க. மணிகண்டன், ம.தி.மு.க. ஜெய்சங்கர், தே.மு.தி.க.தென்னரசு மற்றும் நாட்டு செங்கல் சூளை தொழிலாளர்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்களின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதி அளித்தனர். தொடர்ந்து நாட்டு செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
பண்ருட்டி ஒன்றியம் அண்ணாகிராமம் ஒன்றியத்தில் நாட்டு செங்கல்சூளை தயாரித்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு தானே புயல் ஏற்பட்ட போது, மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் நான் செங்கல் தயாரித்து வழங்கினோம். தற்போதும் செங்கல் சூளை தயாரிக்க சட்டப்படியான உரிமம் பெற சுரங்கம் உதவி இயக்குனரிடம் விண்ணப்பித்து உள்ளோம். ஆனால் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.ஆனால் வேண்டும் என்றே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செங்கல் சூளைகளை அதிகாரிகள் சீல் வைக்கிறார்கள். இதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். மேலும் அதிகமான தொகையை அபராதமாக விதித்துள்ளார்கள். செங்கல் சூளைகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறோம். தற்போது வேலையின்றி தவித்து வருகிறோம். ஆகவே எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %