‘ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’.. ஸ்கெட்ச் போட்ட டி.ஜி.பி.. தட்டி தூக்கிய போலீஸ்.. 2 நாளில் 2,512 ரவுடிகள் கைது!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர் கொலைகள் நடந்தன. வாணியம்பாடி அருகே மனித நேய ஜனநாய கட்சியின் முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து நெல்லையில் போலீசார் ஒருவரின் தம்பி ரவுடிகள் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு அடுத்தடுத்து 2 கொலைகள் அரங்கேறின. திண்டுக்கல்லில் பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய பெண் கொடுரமாக கொலை செய்யப்பட்டார்.
ஓ.பி.எஸ் கண்டனம் அதன்பின்னர் மற்றொரு கொலையும் ஒரே இரவில் நடந்தது. இதேபோல் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பழிக்குபழி கொலைகள் நடந்தன. திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்களில் மக்களிடம் நல்ல பெயர் வாங்கி வரும் நிலையில், இந்த தொடர்கள் கொலைகள் கொஞ்சம் அவப்பெயரை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிகிறது. முதல்வர் ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ் வெளிப்படையாக அறிக்கை விட்டார்
டி.ஜி.பி சைலேந்திரபாபு இதனை தொடர்ந்து போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், மக்களின் பாதுகாப்பு சூழ்நிலையை உறுதி செய்யும்படி டி.ஜி.பி சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டார். ஏற்கனவே ரவுடிகளை ஒடுக்கும் ஸ்பெஷலிஸ்டான டி.ஜி.பி சைலேந்திரபாபு, ரவுடிகளை கிளீன் செய்யும் பணியில் உடனடியாக களமிறங்கினார். இது தொடர்பாக பெரு நகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகியோருக்கு உத்தரவு பறந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தலைநகர் சென்னை தொடங்கி மதுரை, திண்டுக்கல், நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரவுடிகளை போலீசார் களையெடுக்க தொடங்கினார்கள்.
இரவோடு, இரவாக தூக்கினார்கள் சென்னை புளியந்தோப்பில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். இதில் பல ரவுடிகளை கைது செய்தனர். இதேபோல் அரியலூர், திண்டுக்கல், நெல்லை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ரவுடிகள், பல்வேறு குற்றச்செயல்களில் தேடப்பட்டு வந்தவர்கள், பெயிலில் வெளியே வந்தவர்கள் என ஒட்டுமொத்த கேங்க்-களையும் போலீசார் இரவோடு, இரவாக தூக்கினார்கள்.
2,512 ரவுடிகள் கைது நேற்று முன்தினம் மட்டும் 800-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரவுடிகளிடம் இருந்து 250க்கும் மேற்பட்ட அரிவாள்கள், பல்வேறு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த திடீர் ரெய்டால் ரவுடிகள் விழிபிதுங்கி போனார்கள். நேற்று 2-வது நாளாகவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரவுடிகளை களையெடுக்கும் படலம் தொடர்ந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 கத்தி, அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
டி.ஜி.பி சைலேந்திர பாபு ஆலோசனை கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதனை தொடர்ந்து நேராக நெல்லை வந்த டி.ஜி.பி சைலேந்திர பாபு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தென்மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு அவர் ஆலோசனை வழங்கினார். இதேபோல் மதுரையிலும் டி.ஜி.பி சைலேந்திர பாபு, சட்டம்-
ஆபரேஷன் டிஸ்ஆர்ம் இந்த ஆலோசனைக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய டி.ஜி.பி சைலேந்திரபாபு, ” ஆபரேஷன் டிஸ்ஆர்ம் மூலம் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’ சோதனையில் 1600-க்கும் மேற்பட்டோரை விசாரித்துள்ளோம். கொலை குற்ற சம்பவ வழக்குகளை விரைந்து விசாரிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
Source: ThatsTamil