0 0
Read Time:1 Minute, 34 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையும் பெரம்பூரை சேர்ந்த சமூக சேவகர் பாரதிமோகன் அறக்கட்டளையும் சேர்ந்து தமிழகத்தின் பெருமையாக திகழக்கூடிய பனை மரங்கள் நடும் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜன், அறக்கட்டளையின் நிறுவன தலைவர் எஸ்.பாரதி மோகன் ஆகியோர் இன்றுபனை விதைகள் நட்டு துவக்கி வைத்தனர்.

ஒரு லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை சனிக்கிழமை முதல் கட்டமாக மங்கைநல்லூர் முதல் பொறையார் வரை சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிற்கு வீரசோழன் ஆறு ஓரமாக 20000 பனை விதைகள் 500 மரக்கன்றுகளை காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவர்கள் மூலமாகவும் நடப்பட்டது.

பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவதாஸ், பாரதிமோகன் அறக்கட்டளை நிர்வாகிகள் தனுஷ்கோடி ஸ்டாலின் செல்லம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %