0 0
Read Time:5 Minute, 3 Second

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு.. இன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம்.. திமுக ஆதரவு!

டெல்லி: வேளாண் சட்டங்களை கண்டித்து இன்று ‘பாரத் பந்த்’ போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு

விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அங்கு பா.ஜ.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்து நெருக்கடி கொடுக்க விவசாயிகள் முடிவெடுத்தனர். அதன்படி உத்தரபிரதேசம், பஞ்சாப்பில் பாஜக சார்பில் எங்கு கூட்டம், விழாக்கள் நடந்தாலும் விவசாயிகள் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாரத் பந்த்

இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரத் பந்த்’ நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு கொடுத்துள்ளார். இது தவிர பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா

நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் மூடப்படும். மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இயங்கும் என்றும் அமைதியான முறையில் பந்த் நடைபெறும் என்றும் ”சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.
திமுக ஆதரவு

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, அதன் கூட்டணி கட்சிகள் பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும்,. அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனமும் விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %