கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றத்தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் மெகா தடுப்பூசி முகாம் மூன்றாவது கட்டமாக குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விழிப்புணர்வு விதமாக முதல் தவணையாக அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன இரண்டாவது தவணையாக குலுக்கல் முறையில் ஒருவரை தேர்வு செய்து தேர்வு செய்த நபருக்கு செல்போன் வழங்கப்பட்டது. மூன்றாவது தவணையாக நேற்று குலுக்கல் முறையில் 10 நபர்களை தேர்வு செய்து அவர்கள் மீது இந்தியன் வங்கியில் ஆயுள் காப்பீடு ஊராட்சி சார்பில் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாள் குலுக்கல் முறையில் 10 நபர்களை தேர்ந்தெடுத்து இந்தியன் வங்கியின் மூலம் ஆயுள் காப்பீடு செலுத்தப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் அறிவித்திருந்தார். அதன்படி செய்தியைக் கேட்ட கிராம பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டனர் இறுதியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ஜி தமிழ்வாணன் 10 நபர்களுக்கும் ஆயுள் காப்பீடு செய்துள்ளார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடலூர் உதவி ஆட்சியர் ஜெயராஜா பவுலின் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். உடன் வட்டார வளர்ச்சி ஊராட்சி அலுவலர் மோகன்ராஜ் மருத்துவர் தீபனா உதவி ஆசிரியர்கள் சில்வியா அம்பிகா சோனியா செவிலியர்கள் புஷ்பா துர்காதேவி ஊராட்சி செயலாளர் சிலம்பரசன் ஊராட்சி துணைத் தலைவர் உமா மகேஸ்வரி விஜயகுமார் உடன் அங்கன்வாடி உதவியாளர்கள் ரேவதி சித்ரா பணியாளர் வனிதா பணித்தள பொறுப்பாளர்கள் சுபா ஆனந்தவல்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.