0 0
Read Time:1 Minute, 58 Second

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்திலிருந்து மதுரைமாதிரவேளூர் செல்லும் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் இருபுறங்களிலும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு மரக் கிளைகள் மற்றும் செடிகள் அடர்த்தியாக நீண்டு வளர்ந்துள்ளன. இது போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறாக இருந்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், கால்நடையாக நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

அவசரகதியில் வேகமாக வாகனங்களில் செல்லும்போது, வாகன ஓட்டிகளின் முகத்தில் அடிக்கடி மரக்கிளைகள் மோதிவிடுகின்றன. இது கண்ணில் பட்டால் திடீரென கண் பார்வை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இந்த சாலையின் வழியே நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் விவசாயிகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றங்கரையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே கிராம மக்களின் நலன் கருதி கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையின் இரு புறங்களிலும் நீண்டு வளர்ந்து சாலையை மறைத்துக் கொண்டிருக்கின்றன மரக் கிளை மற்றும் செடிகளை அகற்ற வேண்டுமென்று கிராம மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %